அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை படையெடுக்க வைக்கும் திட்டம் - தமிழக அரசின் அதிரடி முடிவு.!

அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை படையெடுக்க வைக்கும் திட்டம் - தமிழக அரசின் அதிரடி முடிவு.!

Update: 2019-11-13 11:21 GMT

சமீப காலமாக, அரசுப் பள்ளிகளில் படிக் கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவர்க ளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மேலும் ஒரு நடவடிக்கை யாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,சத்துணவு சாப்பிடும் பள்ளி மாண வர்களுக்கு காலை உணவும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்க ளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை உணவாக மாணவர்க ளுக்கு தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும்.


இதற்காக சிறந்த சமை யல்காரர்களை கூடுதலாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புரோட்டீன், மற்றும் கலோரி அளவை ஆய்வு செய்து உணவு வழங்கப்படும். கூடுதலாக பழம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தையும் செயல் படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி செலவாகும் என்று கணக்கி டப்பட்டுள்ளது.


என்றாலும், இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்க ளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசுப் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லாமல் தடுக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Similar News