மாசுக் கட்டுப்பாட்டு துறையும், நீதிமன்றமும் வலியுறுத்தும் பசுமை பட்டாசுகள் என்பவை இதுதான்.!

மாசுக் கட்டுப்பாட்டு துறையும், நீதிமன்றமும் வலியுறுத்தும் பசுமை பட்டாசுகள் என்பவை இதுதான்.!

Update: 2019-10-26 07:45 GMT


பட்டாசு எப்படித் தோன்றியது?


எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?


பசுமைப் பட்டாசு என்றால் என்ன? இவற்றுக்கான பதில்களை இங்கு காணலாம்.


பட்டாசுகளிலும் இயற்கைப் பட்டாசு, செயற்கைப் பட்டாசு உண்டா?


பாஸ்பேட் மூலப்பொருளைக் கொண்டதும் நிறங்களுக்காக பல வேதிப் பொருட்களை உள்ளடக்கிய பட்டாசுகளையே தற்போது நாம் வெடித்து விளையாடப் பயன்படுத்துகிறோம்.இதில் உள்ள பாஸ்பரஸ், கனிமத் துகள்கள், பிற வேதிப் பொருட்கள் நிலம், நீர், காற்றை மாசுபடுத்துபவை.


உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கானவை.இவை செயற்கைப் பட்டாசுகள் எனப்படும்.
நைட்ரேட் மூலப் பொருட்களையும் இயற்கையான உப்புகளையும் கொண்டு எளிய முறையில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் பசுமைப் பட்டாசுகள் (Green fire works) ஆகும். இதில் உள்ள நைட்ரேட் மற்றும் உப்புகள் நிலம், நீர், காற்றை பாதிப்பதில்லை.மாறாக நன்மை விளைவிக்கும் உரங்களாகும்.


தீங்கு விளைவிக்காத பசுமைப் பட்டாசை யார் கண்டுபிடித்தது? முதன் முதலாக மனிதன் கண்டுபிடித்த பட்டாசே பசுமைப் பட்டாசுதான்.பெங்- ஜா- கன்-மூ என்கிற புத்தகம் நம் தொல்காப்பியத்தைப் போன்ற பழமையான சீன நூல் நாற்பது வகை உப்புகளை விளக்குகிறது. இப் பழங்கால வேதியியல் குறிப்புகள் மூலம் மிகப் பழங்காலத்திலேயே உப்பளம், உப்புப் பாறைகள், உப்புக் காய்ச்சுதல் போன்றவற்றை மிக நுணுக்கமாக அறிந்து பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது.
பாறை உப்புகளை சமையலுக்குப் பயன்படுத்தும் போது அவை நெருப்பில் பல நிறங்களுடன் வெடிப்பதை உணர்ந்த சீனர்கள், அந்த உப்புகளை மூங்கில் குச்சிகளில் அடைத்து வெடி விளையாட்டைக் கண்டறிந்தனர்.


மூங்கிலுக்குள் அடைத்து வெடிகளாகவும், மூங்கில் குச்சியில் மருந்தைக் கட்டி ராக்கெட்டாகவும் அவர்கள் மிகப் பழங்காலத்திலேயே விழாக்களில் பயன்படுத்தினர்.பல தொழில்நுட்பங்களைப் போலவே இதையும் வெளிநாடுகள் அறியாமல் காத்தனர். ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் இந்தியா வந்து செல்லும் போது இந்தியாவில் பரவியதாக அறிகிறோம்.


இந்தியாவில் விழாக்களின் முடிவில் எழுப்பும் வான வெடிகள் பிறகு தோன்றியதாக அறிகிறோம். இவ் வெடிகள் பொட்லி எனப்பட்டன.


சேர நாட்டில் பொட்லி வெடிகள் மிகப் பிரபலமாக இருந்துள்ளது. இயற்கையான பட்டாசான இதன் உப்புகள் மேகத்தைக் குளிர வைத்து உடனே மழையை ஏற்படுத்த வல்லன. விழா முடிந்து மழை பொழிந்தவுடன் மக்களும் மனமகிழ்வது இந்த இயற்கையான பட்டாசுகளால் என்று இப்போதைய ஆய்வுகளால் அறிகிறோம்.


விமானங்கள் மூலமாக உலர்ந்த பனிக்கட்டி ( Dry carbon di oxide) மற்றும் உப்புகள் தூவப்பட்டே செயற்கை மழை உண்டாக்கப்படுகிறது. இதே வேலையை இந்தப் பசுமைப் பட்டாசுகளும் செய்ய வல்லன. உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.


சாரமண் எடுத்து உப்புக் காய்ச்சுதல், வெடியுப்பு, வேட்டுத்திரி போன்ற நுட்பங்கள் மற்றும் நாட்டு வெடி, வெங்காயவெடி போன்ற இயற்கை சார்ந்த நுட்பங்களைப் பயன்படுத்தியவர்களே நம் முன்னோர்கள் என்பதே உண்மை.இரு நூறு வருடங்களில் தான் பாஸ்பரஸ் சார்ந்த செயற்கை வெடிகள் உள்ளே புகுந்த பின்னரே நிலம், நீர்,காற்று மாசுகளை ஏற்படுத்திக் கொண்டோம் என்பதே உண்மை


1900 களுக்குப் பின்னர்தான் செயற்கை வெடிகள் அதிகரித்துள்ளது.தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்றே. தாயாரிப்புகளும் இயற்கையை நோக்கி நகர்தல் மிகவும் அவசியமானதே.


இயற்கையை நேசிப்போம்
இயற்கையைக் காப்போம்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


Similar News