முறையாக வரி கட்டாதவர்களே ஜி.எஸ்.டியை எதிர்கின்றனர் : வர்த்தக பாதிப்புகளுக்கு ஜி.எஸ்.டி காரணம் கூறுவது தவறு - ராம்ராஜ் காட்டன் நிறுவன இயக்குனர் நாகராஜன்!

முறையாக வரி கட்டாதவர்களே ஜி.எஸ்.டியை எதிர்கின்றனர் : வர்த்தக பாதிப்புகளுக்கு ஜி.எஸ்.டி காரணம் கூறுவது தவறு - ராம்ராஜ் காட்டன் நிறுவன இயக்குனர் நாகராஜன்!

Update: 2019-10-04 12:04 GMT

வர்த்தக பாதிப்புகளுக்கு ஜி.எஸ்.டி காரணம் என்று வீண் பழி போடுவது தவறு என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இயக்குனர் நாகராஜன் கூறியுள்ளார்.


மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பண்டங்கள் மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரியை அறிமுகப்படுத்திய பிறகு தொழில்கள் நலிவடைந்ததாக திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு பதிலடி தரும் வகையில் அமைந்திருக்கிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ள கருத்து.


ஜி.எஸ்.டி குறித்து பேசிய அவர், இதற்கு முன்னர் வாட் வரி இருந்தது. அதனை முறையாக செலுத்தி வந்தவர்களுக்கு ஜி.எஸ்.டி ஒன்றும் புதிதல்ல. அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. ஜி.எஸ்.டி வருவதற்கு முன்னர் வரை, செலுத்திய வரியை திரும்ப பெற முடியாத சூழ்நிலை இருந்தது.


ஆனால் ஜி.எஸ்.டி வந்த பிறகு செலுத்தும் வரியில், முழுமையாக உள்ளீட்டு வரி திரும்ப பெற முடிகிறது. ஜி.எஸ்.டியால் கடந்த ஆண்டு மட்டும் எங்கள் நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மீதமாகியுள்ளது. இதற்கு முன்னர் வரியை முறையாக செலுத்தாதவர்கள் தான் ஜி.எஸ்.டியை பார்த்து பயப்படுகின்றனர். அதனை விமர்சிக்கின்றனர்.


வர்த்தக பாதிப்புகளுக்கு ஜி.எஸ்.டி காரணம் என்று வீண் பழி போடுவது தவறு. வரியை முறையாக செலுத்தினால் இன்னும் வரி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. வரி செலுத்தாமல் இருந்துவிட்டு அரசை குறைகூற கூடாது.


வர்த்தக பாதிப்புகள் என்ன என்று அறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்களுக்கு வரி மூலம் கிடைக்கும் வருவாய் இன்றியமையாததாகும். அதனை முறையாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


Similar News