பேச்சிலர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!
பேச்சிலர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!
ஜி.வி.பிரகாஷ் குமார் தர்போது நடிகராக நடித்து வருகிறார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை நடித்து கொண்டு வருகிறார். அவர் தேர்ந்து எடுக்கும் படங்களின் மாறுபட்ட கதை களங்களின் மூலம் மற்றும் அவருடைய வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றியை பதித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஜி.வி.பிரகாஷ். அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பேச்சிலர்.
இப்படத்தின், இயக்குநர் சசியின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகி பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி. படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . சான் லோகேஷ் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு இயக்குநராக தேனி ஈஸ்வர்.