எதற்கெடுத்தாலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். என்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்.? இத்தனை நாள் பரப்பியது எல்லாம் போலி - இது தான் உண்மை!
எதற்கெடுத்தாலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். என்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்.? இத்தனை நாள் பரப்பியது எல்லாம் போலி - இது தான் உண்மை!
இஸ்லாம் மத பெண்கள் மீது சிலர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் பர்தா அணிந்திருக்கும் பெண்கள் மீது சிலர் தண்ணீர் ஊற்றுவதும், அவர்கள் அஞ்சி ஓடும் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் வைரலாகும் இந்த வீடியோ உண்மையில் ஆறு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாகும். இந்த வீடியோவினை ஒருவர் ஆர்.எஸ்.எஸ். குழுவினர் இஸ்லாம் கல்லூரி மாணவிகளை கொடுமைப்படுத்துகின்றனர் எனும் தலைப்பில் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
முப்பது நொடிகள் ஓடும் வீடியோவினை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பகிர்ந்து வருகின்றனர். வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், இந்த வீடியோ இலங்கையில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வந்தாருமூளை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதே வீடியோ லங்கா சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 24 ஆம் தேதி நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இஸ்லாம் மத பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் பாருங்கள் என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் இது இலங்கை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதும், இதற்கும் ஆர்.எஸ்.எஸ். குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பரப்பாதீர்கள். அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க வழிசெய்யும் என்று கூறுகிறது மாலைமலர் செய்தி தொகுப்பு.