சட்ட விரோத குழந்தைகள் இல்லம், கட்டாய மத மாற்றம் - கிருஸ்துவ கருணை இல்லத்தின் அகோர முகம்

சட்ட விரோத குழந்தைகள் இல்லம், கட்டாய மத மாற்றம் - கிருஸ்துவ கருணை இல்லத்தின் அகோர முகம்

Update: 2018-11-23 04:01 GMT
ஹரியானா மாநிலம், அம்பாலா பகுதியில் உள்ள கலரேஹெரி என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ கருணை இல்லத்திற்கு மாவட்ட திட்ட அலுவலர், சிறுவர் நலக் குழு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு உறுப்பினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அடங்கிய கூட்டு குழு ஒன்று சென்று, அங்கிருந்து 25 குழந்தைகளை மீட்டது.

DPO பல்ஜித் கவுர் கூறுகையில், "கருணை இல்லம் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சட்டத்தின்படி கருணை இல்லத்தை பதிவு செய்ய தவறிவிட்டனர். சிறுவர்கள் கட்டாயப்படுத்தி கிறித்துவ மதத்திற்கு மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.


"ஏ.டி.சி. தலைமையின் கீழ் துணை ஆணையாளர் ஒரு குழுவொன்றை அமைத்தார். பின்னர், சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டது. இருந்தும் அவர்கள் பதிவு செய்ய தவரிவிட்டனர். எனவே, பதிவு செய்யப்படாத இல்லத்திலேயே குழந்தைகளை வைத்திருப்பது பொருத்தமானது அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.


அந்த இல்லத்தில் இருந்த 3-இல் இருந்து 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (12 பெண் குழந்தைகள் மற்றும் 13 ஆண் குழந்தைகள்) மருத்துவ பரிசோதனைக்காக அம்பலா கண்டோன்மென்ட் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


குழந்தைகள் நல வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குருதேவ் சிங் கூறுகையில், "குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்", என்று கூறினார்.


சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே இதே போல ஒரு கிறிஸ்துவ கருணை இல்லம், எலும்பு கடத்தலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Inputs - Tribune India

Similar News