ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற மனோகர் லால் கட்டார்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற மனோகர் லால் கட்டார்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Update: 2019-10-28 01:53 GMT

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. இந்தச் சூழல் அதிக இடங்களில் வெற்றிப்பெற்ற பா.ஜ.க, ஜனநாயக ஜனதா கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று ஹரியானா ஆளுநரை சந்தித்த மனோகர் லால் கட்டார் ஆட்சியமைக்க உரிமை கோறினார். 


இந்நிலையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராகவும், ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இந்த விழாவில் பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


ஹரியானா மாநில முதலமைச்சராக பதவியேற்று உள்ள மனோகர் லால் கட்டார் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ள துஷ்யந்த் சவுதாலா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1188392963853996032?s=19

Similar News