இவர் தான் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் - மைக் ஹசி விளக்கம்!!
இவர் தான் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் - மைக் ஹசி விளக்கம்!!
ஒருநாள் கிரிக்கெட்டில் யார் சிறந்த கேப்டன் என்பதை மைக் ஹசி கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர் மைக் ஹசி. அதேபோல் அவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை டோனியின் தலைமையின் கீழ் வெளிப்படுத்தினர்.
ஆஸ்திரேலியா அணிக்காக ரிக்கி பாண்டிங் உலகக்கோப்பையையும், இந்தியா அணிக்காக எம்எஸ் டோனி உலகக்கோப்பையையும் வாங்கி தந்துள்ளனர்.
இருவரில் யார் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்று மைக் ஹசி கூறுகையில் இது ஒரு கடினமான முடிவு. இருந்தாலும், என்னை பொறுத்தவரை ரிக்கி பாண்டிங்தான் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்று சொல்வேன்.
ஏனென்றால் நான் எம்எஸ் டோனியின் உடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இல்லை . ஆகவே, ரிக்கி பாண்டிங் தான் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்று தேர்வு செய்துள்ளேன்’’ என்றார்.