வேளாண்மை முன்னேற்றம்: 28 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் திட்டம் - தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட முயற்சி!
வேளாண்மை முன்னேற்றம்: 28 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் திட்டம் - தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட முயற்சி!
உள்நாட்டிலேயே சமையல் எண்ணெய் போதிய அளவு கிடைப்பதற்காக எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப் பனை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் 29 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் நிலையில் 2019 – 20-லிருந்து தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கான நிலப்பரப்பை கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2008-2009-ல் 27.72 மில்லியன் டன்னாக இருந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 2018-19-ல் 32.26 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதே போல் இந்தக் காலகட்டத்தில் 1 ஹெக்டேருக்கான உற்பத்தித் திறனும் 1006 கிலோ கிராமிலிருந்து 1265 கிலோ கிராமாக அதிகரித்துள்ளது.
2008-2009-ல் 6.34 டன்னாக இருந்த சமையல் எண்ணெய் உற்பத்தி 2018-19-ல் 10.44 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.