தளபதி 64 படத்தில் இவர் தான் வில்லனா!!

தளபதி 64 படத்தில் இவர் தான் வில்லனா!!

Update: 2019-09-27 11:18 GMT

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள 'பிகில்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது . இதை அடுத்து அவர் நடிக்கும் '64' திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இருந்தாலும் அவர் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதால் இதில் நடிப்பாரா என்பது கேள்வி.





’தளபதி 64’ படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரான லிலித்குமார் தான் விஜய்சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் தயாரிப்பாளர். இதனால் விஜய் சேதுபதி ’தளபதி 64’ படத்தில் நடிக்கவிற்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.


இதை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர்.


Similar News