வெளிநாட்டு நிதி மூலம் மதம் மாற்றிய 'ஹிந்து' பிஷப்- FCRA NGO உரிமம் சஸ்பென்ட்!
இந்துக்களைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் அவதூறு பரப்பி வந்த மத போதகர் சுரேஷ் கதேராவின் ஹார்வெஸ்ட் இந்தியா என்ற NGOவின் FCRA உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சஸ்பென்ட் செய்துள்ளது. பிஷப் சுரேஷ் கதேரா இந்துக்களைப் பற்றியும் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியும் பொய்யான தகவல்களைக் கூறி வெளிநாட்டு கிறிஸ்தவர்களிடம் நிதி வசூல் செய்து வந்தார்.
பிஷப் சுரேஷின் இந்து விரோத மற்றும் இந்திய விரோத போக்குகள் குறித்து Legal Rights Protection Forum (LRPF) என்ற அமைப்பு உள்துறை அமைச்சகத்திடம் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தது. பிஷப் கதேரா அண்மையில் 'ஒரு எஸ்சி இந்து' என்று குண்டூர் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது. ஒரு பக்கம் இந்து என்று அரசு ஆவணங்களில் குறிப்பிட்டுக் கொண்டே மறுபக்கம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்தவ மதத்தை பரப்ப நிதி திரட்டி வந்தார்.
இவர் அமெரிக்காவில் நடந்த ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில், "மதபோதகர்கள் தாக்கப்படுகிறார்கள், சர்ச்சுகள் எரிகின்றன. எங்கள் பிரதமர் ஒரு மோசமான மனிதர். அவர் இந்தியாவில் கிறிஸ்தவர்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அவர் இந்தியாவை இந்துக்கள் மட்டுமே வாழும் நாடாக ஆக்க முயற்சிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பல மதபோதகர்கள் கொலையுண்டனர்" என்று பேசினார்.
மற்றொரு நிகழ்வில் இந்து மதக் கடவுளர்களையும் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசிய அவர், "நம் எதிரிகளின் கோட்டையான குண்டூரில் உள்ள கொடூருவில் சிலுவைப்போர் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் King's Temple என்ற சர்ச்சை நடத்தி வருவதோடு 10 பைபிள் கல்லூரிகள் மூலம் நூற்றுக்கணக்கான மதபோதகர்களை உருவாக்கி வருகிறார்.
வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று இத்தகைய மதமாற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த போதும், இவரது ஹார்வெஸ்ட் இந்தியா அமைப்பு 2012ஆம் ஆண்டுக்குப் பின் உள்துறை அமைச்சகத்திடம் ஆண்டறிக்கையே தாக்கல் செய்யவில்லை. இந்த தரவுகளை குறிப்பிட்டு LRPF உள்துறை அமைச்சகம் ஹார்வெஸ்ட் இந்தியா என்ற NGOவின் FCRA உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியது.
சில நாட்களுக்கு முன்பு தான் பிஷப் சுரேஷின் மனைவி ஹென்றி கிறிஸ்டினா குண்டூரு மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.