சிறுவனுக்கு மரண தண்டனை கொடுக்காததால் இந்து கோவில் இடிப்பு!

மதரசா நூலகத்தில் மத புதத்தங்களை வைத்திருந்த கம்பளத்தின் மீது சிறுவன் ஒருவன் வேண்டுமென்று சிறுநீர் கழித்ததாகவும் இதனால் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஜாமினில் வெளியே விடப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் இந்து கோவிலை அடித்து உடைத்துள்ளனர்.

Update: 2021-08-05 09:21 GMT

பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவம் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நடந்தேறியுள்ளது.

பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை சிலர் அடித்து உதைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்துக் கோவில் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவிலை அடைவதற்கு முன்னதாக சமூக விரோதிகள் கோவிலை அடித்து உடைத்துள்ளனர். கோவிலை அடித்து உடைத்து அதுமட்டுமில்லாமல் அங்கு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மதரசா நூலகத்தில் மத புதத்தங்களை வைத்திருந்த கம்பளத்தின் மீது சிறுவன் ஒருவன் வேண்டுமென்று சிறுநீர் கழித்ததாகவும் இதனால் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஜாமினில் வெளியே விடப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் இந்து கோவிலை அடித்து உடைத்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம். அந்த சிறுவன் அவ்வாறான குற்றம் செய்ததாகவும் எனவே அவனை ஜாமினில் வெளியில் விட்டதற்காக இந்து கோவிலை உடைத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில்கள் பல தொடர்ந்து இடிக்கப்பட்டன. முன்னதாக மார்ச் மாதத்தில் ராவல்பிண்டியில் உள்ள 100 வருடங்கள் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதேபோல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சிந்து மாகாணத்தில் உள்ள தெறி கோவில், மாதா ராணி கோவில், ஸ்ரீராம் தேவ் கோவில், ஆஞ்சநேயர் கோவில், இஸ்லாமாபாத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் என பல வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Source : Twitter

Image courtesy : News 18

Tags:    

Similar News