காடுவெட்டிபாளையம் மக்களே முன்வந்து தடுத்த மதமாற்ற சம்பவம் - இந்து முன்னணியினர் பாராட்டு!
இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் படுவதை தடுத்த காடுவெட்டி பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் பாராட்டு.
தற்போதும் மதமாற்றத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து கொண்டுதான் வருகின்றது. கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வருவதை தற்போது மசோதாக்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வருவதன் மூலமாக கட்டாயத்தின் பேரில் பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள மக்களின், ஏழ்மை நிலையை பயன்படுத்தி கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் மிஷனரிகளின் அட்டூழியத்தை நாம் தடுக்க முடியும்.
இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கும் ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அப்படி மீறியும் ஈடுபடுவோர் மீது நாம் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் அவர்கள் சட்டத்திற்கு முன்பு கட்டுப்படுவார்கள். அந்த ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. காடுவெட்டி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கிராமங்களில் நடக்கும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள்.
அந்த கிராமங்களில் வசிக்கும் இந்து மக்கள் முழுவதும் ஒன்று சேர்ந்து தங்களுடைய கிராமங்களுக்கு எதிராக அடக்கப்படும் மதமாற்றத்தை அம்பலமாகி காட்டியுள்ளார்கள். மேலும் இதன் காரணமாக அங்கு மத மாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது இந்தப் ஒரு செயலை தற்போது இந்து முன்னணி கட்சியின் சார்பில் பாராட்டப்பட்டது. இதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் மதமாற்றத்திற்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.
Input & Image courtesy: News