கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பு மீது நடவடிக்கை - களத்தில் இறங்கிய இந்து முன்னணி!
கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தல்.
கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தி இருக்கிறது. திருநெல்வேலி இந்து முன்னணி அமைப்பின் கூட்டமைப்பின் செயலாளராக ஆர்.கே கண்ணன் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை தற்பொழுது அளித்து இருக்கிறார். குறிப்பாக அவர் அளித்துள்ள மனுவில் இது பற்றி கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி,பள்ளிகள் போன்றவை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு தானமாக கொடுத்த நிலங்களில் தான்,தற்போது பல்வேறு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பல்வேறு இடங்களில் கோவில் அமைந்து இருக்கிறது. கோவில் இருந்த இடங்களில் தான் இத்தகைய வளங்கள் கட்டப்பட்டுள்ளது. தவிர, கோவில் அங்கு புதிதாக கட்டப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளில் ஒரு கோவில் கூட அந்த துறை சார்பில் கட்டப்படவில்லை. இந்நிலையில் கிறிஸ்துவ சேனை முன்னேற்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சட்டவிரதமாக அரசு அலுவலகங்களில் அமைந்துள்ள கோவில்களை அகற்றும் முயற்சி செய்து வருகிறார்கள். சட்ட விரோதமான கோவில்களை இடிக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை கொடுத்திருக்கிறார்கள்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவ்வமைப்பு செயல்படுவது கண்டனத்துக்குரியது. எனவே தவறான தகவல்களை கூறி சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தவறான தகவல்களை கூறி சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.