மேற்கு வங்கத்தில் பாஜகவை சேர்ந்த இந்து துறவி கொடூரக் கொலை!! 4 நாட்களில் நடைபெற்ற 8 வது கொலையால் பதற்றம்

மேற்கு வங்கத்தில் பாஜகவை சேர்ந்த இந்து துறவி கொடூரக் கொலை!! 4 நாட்களில் நடைபெற்ற 8 வது கொலையால் பதற்றம்

Update: 2019-10-11 03:20 GMT

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திருணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கிழந்த நிலையில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் தேர்தலில் மம்தா ஆட்சி இழப்பார், பாஜக புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்கும் என பத்திரிகைகள் கணிப்பு வெளியிட்டு வருகின்றன. மேலும் அங்கு நடைபெறும் இடைத்தேதல்கள், பஞ்சாயத் தேர்தல்களிலும், பாஜக ஆளும் கட்சிக்கு சரியான சவால் விடும் வகையில் வெற்றியை குவித்து வருகிறது.


இதைப் பொறுக்கமுடியாத திருணாமுல் கட்சியினர் பாஜகவினர் மற்றும் இந்துத்வா தலைவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மாநிலம் முழுவதும் 300 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நதியாவைச் சேர்ந்த இந்து சாமியார் மற்றும் பாஜக தொண்டர் சுப்ரியோ பானர்ஜி நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.


மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இந்த சோக சம்பவங்கள் உதாரணமாகும் என பத்திரிகைகள் வருணித்துள்ளன. இந்த நிலையில் தங்களை மனிதாபிமானிகள், தாராளவாதிகள் என அழைத்துக் கொள்ளும் பல பத்திரிக்கையாளர்களும், இடது சாரியினரும் இது பற்றி வாய்மூடி கிடப்பது வேதனை அளிப்பதாக ஆங்கில செய்தி தாள்கள் கூறியுள்ளன.




https://twitter.com/BJP4Bengal/status/1182328322413326336?s=08

Similar News