காவி உடையணிந்த பாதிரியார்கள் இந்து முறைப்படி நடந்த கிறிஸ்தவ மத சடங்குகள்! மத மாற்றத்தின் உச்சகட்டம்!
காவி உடையணிந்த பாதிரியார்கள் இந்து முறைப்படி நடந்த கிறிஸ்தவ மத சடங்குகள்! மத மாற்றத்தின் உச்சகட்டம்!
கர்நாடக மாநிலத்தின் உள்ள பெல்காவி மறை மாவட்ட ஆயராக இருப்பவர் டெரிக் பெர்னாண்டஸ். இவர் பல தேவாலயங்களுக்கு சென்று பிரார்தனைகளை செய்து வருபவர். இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு பெலகாவி அருகில் உள்ள தேஷ்னூரில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்றிருந்தார்.
பாதிரியார் காவி நிற அங்கி உடுத்தியும், நெற்றியில் திலகமிட்டும் சென்றிருந்தார். அந்த தேவாலயத்தில் இந்து மத முறைகளின் படி பிரார்த்தனைமேற்கொண்டார் என பிரார்த்தனைக்கு வரும் கிறிஸ்துவர்கள் கூறுகின்றனர். அந்த தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது
இந்து மக்களை மதம் மாற்றுவதற்காகவே பாதிரியார் காவி உடை அணிந்து இந்து முறைபடி சடங்குகளை செய்வதாகவும் இந்து மக்களை மனதளவில் இந்து மதமும் கிறிஸ்துவ மதமும் ஒரே வழிபாட்டை பின்பற்றுவார்கள் எனும் பிம்பத்தை உருவாக்குவதற்கு தான் இது போன்ற சடங்குகளை பாதிரியார் செய்து வருகிறார் என அங்கு வாழும் இந்து மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
இதுபோன்ற செயல்களை செய்வதாக அதே நேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களோ பாதிரியார் இது போன்றுஇந்து மத சடங்குகளை செய்து கத்தோலிக்க மதத்தின் மாண்பை சீரழித்து விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கிஸ்துவர்களை இந்து முறைப்படி தான் நம் செய்யும் வழிபாடு முறை என்பதை திணிப்பதாக கிறிஸ்துவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் அந்த தேவாலயம் இருக்கும் இடம் முதலில் ஒரு இந்து மடமாக இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பாதிரியார்கள் அந்த மடத்தின் பழக்கவழக்கங்களை பின்பற்றி புலால் உண்ணாமை ஆகியவற்றை கடைபிடித்ததார்கள் , அந்த பழக்கவழக்கத்தை மறக்காமல் இருப்பதற்காகவே இந்த சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிரியார் ஃபெர்னாண்டஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.