துளசி கபார்ட் இவ்வளவு மோசமாக தாக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் அவளுடைய இந்து வாழ்க்கை நெறிமுறைகளுக்கு உட்பட்ட நம்பிக்கை. கபார்ட் ஒரு வைணவ இந்து மற்றும் பக்தவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை பின்பற்றுபவர். அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட முதல் இந்து - அமெரிக்கர் ஆவார். சைவ உணவு மட்டுமே உண்பவர், அமெரிக்க எம்.பி-யாக பதவி ஏற்ற போது கூட கபார்ட் பகவத் கீதையில் உள்ள முக்கிய சுலோகங்களை கூறி பதவியேற்றார்.
அவர் பிரபலமான தீபாவளி வாழ்த்து வீடியோக்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார். தீபாவளியை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்க தபால் சேவைத்துறை வெளியிட்டு வரும் தபால் தலை வெளியீட்டில் ல் முக்கிய பங்கு இவருடையது. பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடியுடனும் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. உண்மையில் அவர் டெல்லிக்கு விஜயம் செய்த போது, தான் பதவி ஏற்பின் போது உறுதி மொழி எடுத்த பகவத்கீதை நூல் ஒன்றின் பிரதியை பிரதமர் மோடிக்கு அளித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் சிதானந்த் ராஜ்கட்டாவுக்கு அளித்த பேட்டியில், கபார்ட் "இந்துபோபிக் காரணமாக இத்தகைய தாக்குதல்களை பலர் தொடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் எனது கவலைகள் எல்லாம் மற்ற இந்து – அமெரிக்கர்கள் மீது தான். ஏனெனில் அவர்கள் அமெரிக்க அரசின் மேம்பட்ட பதவிகளுக்கு வர முடியாமல் இது தடுக்கும், அவர்கள் தான் யார், தங்களது திறமைகள் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் போகக்கூடும். ஏனெனில், அமெரிக்காவின் பன்முகத்தன்மையின் ஒரு தனித்துவத் தன்மையில் அமெரிக்க இந்துக்கள் பங்கு பெறாமல் போக இது வழி வகுத்துவிடும்" என்றார்.
சமூகம், ஊடகங்கள் மற்றும் கல்வியில் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க இந்து மதத்தின் மீது மேற்குலக நாடுகளில் 200 ஆண்டுகாலமாக வெறுப்பு உள்ளது. கடுமையான எதிர்ப்பும் உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் எலிசபெத் டவுன் கல்லூரியின் மதம் மற்றும் ஆசிய ஆய்வுகள் பேராசிரியரான ஜெஃப்ரி லாங்கின் கூற்றுப்படி, "துளசி கபார்ட் விஷயத்தில், இந்து மற்றும் இந்து தர்மத்தின் மீது தீவிரமாக, ஆழமாக வேரூன்றிய வெறுப்பு – மற்றும் ஒரு பயம் ஆகும்" என்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள "இந்து போபியா(இந்து வெறுப்புணர்ச்சி) விளைவுகள்" என்கிற நீண்ட கட்டுரை எழுதியுள்ளார், இந்துக்களையும் இந்து தர்மத்தையும் எதிர்மறையான ஒளியில் சித்தரிக்கும் அறிவுசார் கூற்றுக்களின் தொகுப்பாக இவற்றை எழுதியுள்ளார். ஒரு இந்துபோபிக் மூலம் இந்து நம்பிக்கை மற்றும் சமுதாயத்தின் எந்தவொரு நேர்மறையான மற்றும் முற்போக்கான அம்சங்களும் இதனால் புறக்கணிக்கப்படுகின்றன, இந்துக்கள் அல்லாத வெளியில் உள்ள செல்வாக்கு பெற்ற கும்பல்களால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 200 ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாக, பாரதத்தின் ஆய்வு, அதன் கலாச்சாரம், மரபுகள், நூல்கள், மதங்கள் போன்றவற்றில் உள் நுழைந்து வெளிநாட்டவர்களும், மார்க்சிஸ்டுகளும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். உதாரணமாக 'இந்தியா' பற்றிய ஆய்வுத் துறை என ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு இந்து சமயம் பற்றிய தவறான கருத்துக்களை இவர்கள் வெளிப்படுத்தியதைக் காணலாம். புராட்டஸ்டன்ட் இறையியல் மற்றும் வேதங்கள் மற்றும் அதன் மதகுரு எதிர்ப்பு மூலம் தவறான எண்ணங்கங்களை கிளப்பிவிட்டதைப் போலவே இந்து சமயம், பாரதீயம் குறித்தும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள்தான் பிராமணீய எதிர்ப்புக்கான முன்னோடிகள் என்பதை ஒருவர் எளிதாகக் கண்டறிய முடியும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் ஹண்டர் கல்லூரியின் பேராசிரியர் விஸ்வ அட்லூரியின் கூற்றுப்படி, இந்த இந்தியலஜிஸ்டுகள், “இந்து தர்ம நூல்களில் உள்ள “ உண்மையான ”பொருளை அணுக முடியவில்லை… ஏனெனில் பாரதியர்கள் ஒருபோதும் அறிவியல் விமர்சன சிந்தனையை வளர்த்துக் கொள்ளவில்லை.” சர் வில்லியம் ஜோன்ஸின் ஆக்ஸ்போர்டு நினைவுச்சின்னமான பல்கலைக்கழக கல்லூரி சேப்பல் இந்த அணுகுமுறைக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு ஒன்றைத் தருகிறார்.
இந்த நினைவுச் சின்னம் ஒருவர் வசதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு மேசை மீது ஏதோ எழுதுவதைக் காட்டுகிறது, அதே நேரத்தில் மூன்று பாரதியர்கள் அவருக்கு முன்னால் கீழே குந்திக் கொண்டிருக்கிறார்கள். நினைவுச்சின்னத்தின் அடியில் உள்ள கல்வெட்டில், "அவர்கள் இந்து மற்றும் முகமதிய சட்ட அமைப்புகளை உருவாக்குகிறார்கள்." என எழுதப்பட்டுள்ளது.
இதேபோல், உலகெங்கிலும் உள்ள தெற்காசிய ஆய்வுகளின் மையங்கள்/துறைகளில் இந்துபோபியா ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில், பாரதம் உட்பட தெற்காசியா தொடர்பான ஆய்வுத்துறைகள் இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படுத்தப்பட்டன. என்றாலும் இந்த கல்வி நடவடிக்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் பன்னாட்டு அரசியல் சுயநலம் சார்ந்த தேவைகளின் விளைவாகும்.
அத்தகைய மையங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தெற்காசிய பிராந்தியத்தில் உளவுத்துறை மூலம் பல தகவல்களை சேகரிப்பது ஆகும். தெற்காசிய நிபுணரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தலைவர் பெர்க்லி நிக்கோலஸ் டிர்க்ஸின் கூற்றுப்படி, இந்த தெற்காசிய மையங்களின் பல முக்கியஸ்தர்கள், பாரதத்தில் இரகசியமாக வேலை செய்யும் அமெரிக்காவின் உளவாளிகள். கலிஃபோர்னியா உயர்நிலைப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகங்களில் உள்ள சார்புகளையும் தவறுகளையும் எதிர்த்துப் போராடுவதில் இந்து-அமெரிக்கர்களின் போராட்டங்கள் இந்த தெற்காசிய மையங்களால் ஏற்படுத்தபட்ட இந்துபோபியாவுக்கு சான்றாகும்.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மார்க்சிஸ்டுகள் பாரதத்தின் கடந்தகால சாதனைகள் குறித்து எந்த குறிப்பையும் உணர்ந்து வேண்டுமென்றே மறைத்து மறுத்து வந்தனர். இந்து சமுதாயத்திற்கு எதிரான ஒவ்வொரு அம்சங்களையும் காலனித்துவவாதிகள் மற்றும் மிஷனரிகள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அவர்கள் அழைத்துச் சென்றனர். அதில் பெரும்பகுதி பாரதிய பாடப் புத்தகங்களிலும், ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இதற்கு அமெரிக்க தேசிய பொது வானொலி (என்.பி.ஆர்) பத்திரிகையாளரின் சமீபத்திய இந்துபோபிக் சமூக ஊடக பதிவு ஒரு கடுமையான விஷயமாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து-அமெரிக்க சமூகத்தினர் கடுமையான அழுத்தத்தம் கொடுத்தனர், இதனால் அந்த ஆள் பிறகு ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
அமெரிக்காவின் அரசியல் நீரோட்டத்தை பரிசோதிக்கும் இந்து - அமெரிக்கர்கள் பற்றிய கவலைகள் உண்மையானவை என்றாலும், உண்மையான அக்கறை அவர்களின் பாதுகாப்பில் உள்ளது. பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(எஃப்.பி.ஐ) 2018-ஆல் சமீபத்தில் வெளியிட்ட "இந்து சமய போபியா குறித்த வெறுப்புக் குற்றத் தகவல்கள்" படி சமய வெறுப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 2015-ல் இருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த கட்டுரை டைம்ஸ் ஆப் இந்தியா-இணைய வலைப்பதிவுகளில் அக்டோபர் 16, 2019 அன்று வெளியிடப்பட்டது. சிறிய மாற்றங்களுடன், இங்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது)