இஸ்லாத்திலிருந்து இந்து மதத்தை தழுவிய இந்தோனேஷிய முதல் ஜனாதிபதியின் மகள் சுக்மாவதி சுகர்னோபுத்திரி !

Update: 2021-10-24 06:45 GMT

இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி சுகர்ணோவின் மகளான சுக்மாவதி சுகர்னோபுத்திரி இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறுகிறார் என்று சி.என்.என் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாவது, "சுகர்ணோவின் மூன்றாவது மகளும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரியின் இளைய சகோதரியுமான 70 வயதான சுக்மாவதி சுகர்னோபுத்திரி கடந்த 2018 ஆம் ஆண்டில், இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் கவிதையை எழுதினார் என குற்றம் சாட்டி இஸ்லாமிய குழுக்கள் அவதூறு புகார் அளித்தனர்.

அந்த கவிதையை இந்தோனேசியாவின் ஃபேஷன் வீக்கில் குறிப்பிட்டுள்ளனர். அதில், "இந்தோனேசிய ஹேர் பன் முஸ்லிம்கள் வழக்கமாக அணியும் முழு முக முக்காட்டை விட அழகாக இருக்கிறது" என குறிப்பிட்டார். அதற்கு இஸ்லாமியர் பெண்களின் புனித உடையான முக்காட்டை இழிவுபடுத்திவிட்டார் என இஸ்லாமிய குழுக்கள் கோபம் கொண்டு போராட்டங்கள் செய்தனர். இதனை தொடர்ந்து சுக்மாவதி சுகர்ணோபுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.


"இந்தோனேசியாவின் அனைத்து முஸ்லிம்களுக்கும், குறிப்பாக கவிதையால் புண்படுத்தப்பட்டவர்களுக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சுக்மாவதி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீருடன் கூறினார். அதிலும் திருப்தியடையாத இந்தோனேசிய உலமா பாதுகாப்பு அணி (TPUI) மற்றும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (GMII) போன்ற கடுமையான இஸ்லாமிய குழுக்கள் அவரது மன்னிப்பை மறுத்து, அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதனைதொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் தோல்வி மற்றும் மனகசப்புகளால் சுக்மாவதி சுகர்னோபுத்திரி இந்து மதத்தை தழுவி அதன் சடங்கை ஏற்றார் என 'சி.என்.என் இந்தோனேசியா' தெரிவித்துள்ளது.



Source - swarajyamag.com

Tags:    

Similar News