வீட்டு சாப்பாடுதான் வேண்டும்: அடம் பிடித்த சிதம்பரம்...அனுமதித்த சிபிஐ!!
வீட்டு சாப்பாடுதான் வேண்டும்: அடம் பிடித்த சிதம்பரம்...அனுமதித்த சிபிஐ!!
டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனக்கு வீட்டில் சமைத்த உணவு தான் வேண்டும் என கேட்டு, கேன்டீன் சாப்பாட்டை சாப்பிட மறுத்து வந்ததால் அவர் வீட்டிலிருந்து வந்த உணவை சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்எக்ஸ் மீடியாக வழக்கில் ஆக.,26 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனக்கு கேன்டீன் சாப்பாடு வேண்டாம் எனக் கூறி நேற்று (ஆக.,22) இரவு சாப்பிடாமல் இருந்ததாகவும், கோர்ட் அனுமதி இல்லாமல் வீட்டு உணவு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியதால் சிதம்பரம் சாப்பிடாமல் அடம் பிடித்ததாகவும், பின்னர் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் சிதம்பரத்திற்கு வீட்டில் சமைத்த உணவே வழங்கப்பட்டதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தும் வரும் நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (ஆக.,23) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..