நீங்களும் ஆகலாம் பிரம்மா விஷ்ணு சிவனாக எப்படி என்கிறீர்களா? படித்து தான் பாருங்களேன்!
நீங்களும் ஆகலாம் பிரம்மா விஷ்ணு சிவனாக எப்படி என்கிறீர்களா? படித்து தான் பாருங்களேன்!
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உண்மை இருந்தால் நீங்களும் ஆகலாம் பிரம்மா
விஷ்ணு சிவன். எப்படி என்கிறீர்களா. உண்மை எப்போதுமே அழகானது. பரிசுத்தமானது.
நீங்கள் ஒரு செயலை வீட்டிலோ, பணியிலோ அல்லது எங்கு வேண்டுமானலும் செய்கிற பொது
அந்த வேலையை, செயலை பிரம்மாவை போல உண்மை தன்மையோடு உருவாக்குங்கள்.
காரணம் பிரேமா உண்மையை அதாவது ஐம்பூதங்கள் எனும் உண்மை அம்சத்தை மட்டுமே
அடிப்படையாக கொண்டு இந்த உலகை உருவாக்கினார். அதன் மூலமே படைப்பு என்பது
இவ்வுலகில் மெல்ல அரும்ப துவங்கியது. எனவே எந்தவொரு செயலையும்
உண்மைத்தன்மையுடன் துவங்குங்கள்.
உங்கள் செயலின், வேலையின் முழுமையை மகத்துவத்தை உலகிற்கு உணர்த்த அதனை
சிறப்பானதாக பேணிக்காக்க விஷ்ணுவை போல உண்மை நிலையில் அதை கணவன்மாக
மேற்கொள்ளுங்கள். காரணம் எப்போது தேவையற்ற விஷயங்களிலிருந்து காப்பவராகா
விஷ்ணு இருக்கிறார். தேவையற்றவைகள் நீக்கப்படும் பொது தேவையானவை இயல்பாகவே
அதன் வடிவத்தை பெற்றுவிடும். எனவே நாம் ஒரு செயலை செய்கிற போது ஆங்கிலத்தில்
சொல்வது போல perfect ஆக விஷ்ணு தன்மையுடன் நாம் செய்து முடிக்க வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களை, அச்சத்தை , இடர்களை சிவனின் அம்சத்தை போல அழித்து
நிர்மூலமாக்க வேண்டும். இதெல்லாம் நம் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ அதை
அழித்தொழிக்க வேண்டும்.
இந்த மூன்று தன்மையுடன் நாம் செயல்படுகிற பொது தான் பிரகாசமான ஒளிபரவாகத்தை
வெற்றியை நம்மால் சுவைக்க முடியும். இதை தான் நம் முன்னோர்கள் சத்தியம் சிவம் சுந்தரம்
என்றனர். உண்மை தன்மையை அடிப்படையாக கொண்டு படைத்தல் பணியை செய்ததால்
பிராமரின் தன்மையை சத்தியம் என்றும், அனைவரின் நமைக்கானவராக அழிக்கும் பணியை
செய்ததால் சிவம் என்றும், எதையும் ஒரு அழகியலோடு, மேன்மையானதாக செதுக்கும் காக்கும்
பணியை செய்ததால் விஷ்ணு தன்மையை சுந்தரம் என்றும் அழைத்தனர்.