கடைசி நேரத்தில் பாஜகவுடன் கை கோர்த்தது எப்படி! துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் விளக்கம்!

கடைசி நேரத்தில் பாஜகவுடன் கை கோர்த்தது எப்படி! துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் விளக்கம்!

Update: 2019-11-23 06:17 GMT

மகாராஷ்ட்ராவில் சிவசேனை தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய 3 கட்சி கூட்டணி ஆட்சி அமையும் என நேற்று நள்ளிரவு வரை எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று அதிகாலை எதிர்பாராத திருப்பமாக மகாராஷ்டிர முதல்வராக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார். இதை அடுத்து மகாராஷ்ட்ராவில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டது.


உண்மையில் இது நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் திகைப்புக்கு உள்ளாக்கிய சம்பவமாகும். எப்படி ஜம்மு காஷ்மீரில் யாரும் அனுமானிக்க முடியாத வகையில் பாதுகாப்பான முறையில் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35 ஏ பிரிவு அரசியல் சட்டங்கள் நீக்கப்பட்டதோ அதே போன்ற சஸ்பென்ஸ் உடன் மஹாராஷ்ட்ராவிலும் சில ரகசியங்களை காத்து பாஜக தலைமை ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு வாக்களித்த பெருவாரியான மக்களுக்கும், தேசிய அளவில் பாஜகவினருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


இதில் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்ட சிவசேனா மண்ணைக் கவிக் கொண்டது. கொள்கையை காற்றில் பறக்கவிட்டு விட்டு காங்கிரசும் ஏமாந்து போய்விட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இது இப்படித்தான் நடக்க வேண்டும் என திட்டமிட்டு செய்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருமகன் அஜித் பவார் கூறுகையில் “ சிவசேனாவுக்கு முழுமையான உறுதி எதையும் நாங்கள் வழங்கவில்லை, இடையில் பேச்சு வார்த்தை நடந்தது மட்டும் உண்மை. எங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையவேண்டும், குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும்,


அத்துடன் எங்கள் கட்சிக்கு விவசாயிகள் நலன் முக்கியது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கூட பலகோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்தலைவர் சரத் பவார் பேசினார். நிலையான ஆட்சி, விவசாயிகள் நலன் இவற்றை கருதி கடைசி நேரத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தோம் என்றார் அவர்.   


Similar News