கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த திட்டம் - தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாகம்: கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க படைத்த சாதனை!

கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த திட்டம் - தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாகம்: கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க படைத்த சாதனை!

Update: 2019-10-21 09:54 GMT

சீர்திருத்த, மாற்று செயல்பாடு, திறம்படச் செயல்படு ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கிய அம்சமாக இருந்தது என்பதைப் பிரதமர் விளக்கினார். கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ள உஜ்வாலா திட்டத்தை கண்காணிக்க தரவு நுண்ணறிவு, டிஜிட்டல் மேப்பிங் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஜன்-தன் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களின் மூலம் மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவதில் எவ்வாறு தொழில்நுட்பம் உதவியது என்பது பற்றியும் பிரதமர் விளக்கினார்.


அரசு மின்னணு சந்தை என்னும் புதுமையான நடைமுறையைக் கையாண்டு அரசுத்துறைகளுக்கு இடையே நிலவிய இடையூறுகளை அகற்றி, தேவைக்கும், விநியோக நடைமுறைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த தமது அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். நாட்டில் வலுவான ஸ்டார்ட் - அப் முறையை குறிப்பாக நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் உருவாக்க தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதையும் அவர் விவரித்தார். இது முற்றிலும் புதிய சுற்றுச்சூழல் சார்ந்த ஸ்டார்ட்-அப்புகளை மேம்படுத்த உதவியதாக பிரதமர் கூறினார்.


தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர், இந்திய தபால் வங்கியின் உருவாக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் பெரும் இடையூறாக உருவான நிலையில், அஞ்சல் துறை முழுமையும், தொழில்நுட்பம் சார்ந்த வங்கித் துறையாக மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அஞ்சல் வங்கி மூலம் லட்சக்கணக்கானோர் பயனடையும் வகையில் தபால்காரர்கள் வங்கிப் பணியாளர்களாக, மாற்றப்பட்டுள்ளனர்.


Similar News