விமான சக்கரங்களில் மனித உடல் பாகங்கள்! ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி செய்தி!

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் சுமார் 640 பேர் பயணித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய செய்தது. அந்த விமானத்தின் சக்கரங்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-18 08:46 GMT

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் சுமார் 640 பேர் பயணித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய செய்தது. அந்த விமானத்தின் சக்கரங்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை பிடித்த நிலையில், பொதுமக்கள் உயிர் தப்பித்தால் போதும் என்று ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.


அது போன்று கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தின் சுவரை ஏறிக்குதித்து பலர் உள்ளே குதித்தனர். அந்த சமயத்தில் கத்தார் புறப்பட்ட அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான சி17 என்ற சரக்கு விமானத்தில், பலர் சண்டையிட்டு ஏறினர். சிலர் இடம் கிடைக்காமல் விமானத்தின் சக்கரங்களை பிடித்து தொங்கியபடி பயணம் செய்தனர். அந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே மூன்று பேர் கீழே விழுந்து இறந்த சம்பவம் அரங்கேறியது. இதனிடையே, அமெரிக்க சரக்கு விமானம் கத்தாரில் தறையிரங்கிய போது, சக்கரத்தில் இருந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: India Today

https://www.puthiyathalaimurai.com/newsview/113215/Human-body-parts-on-an-air-wheel--Shocking-videos-released-from-Afghanistan

Tags:    

Similar News