நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

Update: 2019-10-16 12:00 GMT

இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். தான் பிறந்தது ராஜஸ்தான் மாநிலமாக இருந்தாலும், அவரது பூர்விகம் தமிழ்நாடு. அவரது தாய் மொழி தமிழ்.


மித்தாலி ராஜ் பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்தவர். தான் ஆடிய முதல் சர்வதேச போட்டியிலே சதம் அடித்து சாதித்தவர். அப்பொழுது அவருக்கு வயது 16 மட்டுமே. அதற்க்கு பின் தொடர்நது பல சாதனைகளை படைத்துள்ளார். பெண்களுக்கான கிரிக்கெட்டில் ஒரு சிறப்புமிக்க வீரராக கருதப்படுபவர். இவ்வாறு அவர் இந்தியாவிற்கும், தமிழுக்கும் பல பெருமைகளை சேர்த்துள்ளார்.


இவருக்கு ட்விட்டரில் ஒருவர் தொடர்ந்து ஆலோசனைகளும், தேவை இல்லாத கருத்துக்களும் கொடுத்து வந்துள்ளார். பல முறை தேவையில்லாமல் விமர்சித்தும் வந்துள்ளார். இவ்வளவு நடந்தும் மித்தாலி ராஜ் பொறுமை காத்து வந்தார். ஆனால் நேற்று, மித்தாலி ராஜிற்கு தமிழ் தெரியாது என்று அந்த நபர் விமர்சித்ததால், அதற்க்கு பலமான பதிலை மித்தாலி ராஜ் அளித்தார். அதற்கு மித்தாலி ராஜ், "தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை." என்று பதிலளித்தார்.


"அனைத்துக்கும் மேல் நான் ஒரு இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன். உங்களை போல் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால்தான் நான் வாழ்க்கையில் முன்னேறி செல்கிறேன்" என்றும் மித்தாலி ராஜ் கூறினார்.




https://twitter.com/M_Raj03/status/1184149591651827712


இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவரது பதிலை பலர் பாராட்டி வருகின்றனர்.


Similar News