“உங்களுடன் நான் இருக்கிறேன்; நாடும் உங்களுக்கு துணை நிற்கும்" - சோர்ந்த விஞ்ஞானிகளை தூக்கி நிறுத்திய பிரதமர் மோடி!!

“உங்களுடன் நான் இருக்கிறேன்; நாடும் உங்களுக்கு துணை நிற்கும்" - சோர்ந்த விஞ்ஞானிகளை தூக்கி நிறுத்திய பிரதமர் மோடி!!

Update: 2019-09-07 06:25 GMT


நிலவின் தெற்கு முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், நிலவை நெருங்கும் 2.1 கி.மீ. தொலைவில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.


இந்நிலையில் இன்று (செப்டம்பர்-7) காலை 8 மணியளவில் மீண்டும் இஸ்ரோ மையத்திற்கு வந்த மோடி, விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். “பாரத் மாதாகி ஜெய்” என்ற முயக்கத்துடன் உரையை துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறியதாவது:-


உங்களின் அதிருப்தியை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத்துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடு பெருமை அடைகிறது.


நாட்டின் வெற்றிக்காக விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். மனதை தளர விடாதீர்கள். நமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் நமது இலக்கை இழந்து விடக் கூடாது.


கடந்தசில மணி நேரங்களில் நீங்கள் (விஞ்ஞானிகள்) மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளீர்கள். நாம் மிகவும் நெருக்கமாக வந்தோம். ஆனால் இன்னும் நிறைய எட்டவேண்டி உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில், எல்லாம் மறைந்து விட்டது.





இறுதி நேரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, நிரந்தம் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்காக ஈடு, இணையற்ற உழைப்பை தந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள், வெண்ணை மீது நடப்பவர்கள் அல்ல. பாறை மீது நடப்பவர்கள். உங்களுக்கு நம் தேசம் எப்போதும் துணை நிற்கும்.


உங்களால் முடிந்த அளவிற்கு, நிலவை நெருங்கினீர்கள். நாட்டிற்காக உழைக்கும் உங்கள் அனைவருக்கும், தலை வணங்குகிறேன். உங்களின் குடும்பத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.


நமது விண்வெளி திட்டங்கள் குறித்து நாம் பெருமை கொள்வோம். வரலாற்றில் நம்மை சேர்வடைய செய்யும் தருணங்கள் பல உள்ளன. அதையெல்லாம் வெற்றிகொண்டு, நாம் எழுச்சி பெற்று வந்துள்ளோம்.


ஒவ்வொரு நொடியும் நீங்கள், நம்பிக்கையுடன் பணியாற்றினீர்கள். கடைசி நிமிடத்தில், சிறிய சறுக்கல் ஏற்பட்டது. அது, தோல்வி அல்ல. உங்கள் உழைப்பு, நாட்டை தலைநிமிர வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர, இஸ்ரோவின் பங்கு மகத்தானது.


சிறு சிறு சறுக்கல்கள், இலக்கை அடைய தடையாக இருக்காது. உங்களுடன் நான் இருக்கிறேன், நாடும் உங்களுக்கு துணையாக நிற்கும்.


மிக நெருக்கமாக வந்து பின் தவற விட்டோம். அடுத்த முறை நிச்சமாக வெற்றி நமக்கே. சாதிப்பதற்கு நமக்கான வாய்ப்புக்கள், இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த முறை மிக சிறப்பான பங்களிப்பை கொடுப்போம். சிறப்பான திட்டங்கள், கடுமையான உழைப்பு ஆகியன இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளது.


நாட்டுக்கான உங்களின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் நம்பிக்கையுடன் பயணிப்போம்.


இன்றைய நமது அனுபவத்தின் மூலம், நாளை நாம் சாதிப்போம். விண்வெளியில் இந்தியா தனது பெயரை நிலை நிறுத்தி உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் ஒருபோதும் தோல்வி என்பதே கிடையாது.


நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வர உள்ளன. உங்களின் உழைப்பு ஈடு இணையற்ற ஒன்று. சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் நிலவு மீதான நமது ஆய்வு வலுவடைந்துள்ளது. நிலவை தொடும் நமது முயற்சி நிச்சயம் வெற்றி அடையும்.


இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


Similar News