இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது - ஜெர்மன் பிரதமர் மெர்கல்.!
இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது - ஜெர்மன் பிரதமர் மெர்கல்.!
இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கலுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் சில நிமிடங்கள் ஆலோசித்தார் இந்தியா -ஜெர்மன் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின,இந்தியாவின்,ஜெர்மன் பிரதமர் மெர்கல் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டுக்குரியது என்றும், சமீப காலமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார், பொருளாதாரம் முன்னேற்றம், இந்தியாவில் தனியார் துறையில் முதலீடு ஆகியன குறித்து விவாதித்தோம். முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம். மேக் இன் இந்தியா திட்டம் வரவேற்க கூடியது. இந்த திட்டத்திற்கு ஜெர்மனி முழு ஆதரவு அளிக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ஜெர்மனி பங்குபெறும்.
இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் நல்ல வளம் உள்ளது. ஜெர்மனியில் இந்தியாவின் 20 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். கல்வி மற்றும் அறிவியல் துறையில் இரு நாடுகளும் புதிய கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் வளர்ச்சி மிக முக்கியமானது. இவ்வாறு மெர்கல் கூறினார்.
Translated Article From Economic Times