கருத்து சுதந்திரத்தை நசுக்கும் தி.மு.க : தேசிய அளவில் ட்ரெண்டாகும் #ISupportMaridhas
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் தி.மு.க : தேசிய அளவில் ட்ரெண்டாகும் #ISupportMaridhas
பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமான மாரிதாஸ், தி.மு.க-வை விமர்சித்து தகுந்த ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். தி.மு.க-வின் பிரிவினைவாத நோக்கங்களை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் அந்த காணொளி, சமூக வலைதளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டது. அதன் முழு காணொளியை இங்கே காணலாம்.
தகுந்த ஆதாரங்களுடன் வெளிவந்த இந்த காணொளியில் உள்ள கருத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத தி.மு.க, எழுத்தாளர் மரிதாசுக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை வேரோடு அறுக்கும் நோக்கில் அமைந்துள்ள இந்த புகார், முழுவதுமாக ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் தமிழுக்கு தி.மு.க முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தனது அதிகார ஆதிக்கத்தால் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் தி.மு.க-வை கண்டித்து #ISupportMaridhas என்ற ஹேஷ்டேகை ட்விட்டர்வாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது உலக ட்ரெண்டிங்காக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் மாரிதாசுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கான பதிவுகள் ட்விட்டரிலும், முகநூலிலும், வாட்ஸாப்பிலும் குவிந்த வண்ணம் உள்ளன.