“ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுப்பேன்” -பாராளுமன்றத்தில் அமித்ஷா ஆவேசம்!!
“ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுப்பேன்” -பாராளுமன்றத்தில் அமித்ஷா ஆவேசம்!!
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. 370 ரத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். 370-ஐ மாற்றி அமைக்கலாம் என ஏற்கனவே அந்த சட்ட சரத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே தேசிய கீதம் ஒலிக்க வேண்டும். நாடு முழுவதும் பொருந்தும் சட்டம் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்கவும், காஷ்மீரில் இணைக்கவும் எனது உயிரையும் கொடுக்க தயார். ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க காங்கிரஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா. சபை, நமது விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்திக்கு உண்டு.
இவ்வாறு அமித்ஷா பாராளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றினார்.