பனாரஸ் பல்கலைகழகத்தில் வீரசாவர்க்கர் படம் அவமதிப்பு: இந்து மாணவர்கள் கொந்தளிப்பு! போலீஸ் படைகள் குவிப்பு!
பனாரஸ் பல்கலைகழகத்தில் வீரசாவர்க்கர் படம் அவமதிப்பு: இந்து மாணவர்கள் கொந்தளிப்பு! போலீஸ் படைகள் குவிப்பு!
பனாரஸ் இந்து பல்கலைகழகம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகமாகும். 1916ஆம் ஆண்டில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.
இந்த பல்கலை கழகத்தில் உள்ள அறிவியல் துறை அரங்கத்தில் மகாத்மா காந்தி அடிகள், அண்ணல் அம்பேத்கர், வீரசாவர்க்கர் உட்பட தேசத்தலைவர்களின் படங்கள் சுவரில் மாட்டப்பட்டுள்ளன. நேற்று காலை மாணவர்கள் இந்த அரங்கத்தில் நுழைந்ததும் வீரசாவர்க்கர் படம் மட்டும் கீழே தரையில் விழுந்து கிடந்ததையும், அந்த படத்தின் மீது கருப்பு மை ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டு இருந்ததையும் பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டுத் தீ போல மாணவர்களிடையே தகவல் பரவியது. கொதிப்படைந்த ஆயிரக்கணக்கான இந்து மாணவர்கள் சம்பவத்தை கண்டித்து பல்கலைகழக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த பல்கலைக் கழக அதிகாரிகள் சம்பவத்தை கண்டித்ததுடன், இது குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்ததும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
என்றாலும் பதற்றம் தணியாததால், மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வளாகத்தில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடப்பதற்கு முன்பாக சில இடது சாரி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Translated Article From SWARAJYA