காஷ்மீர் பற்றி கவலைப்படும் இம்ரான்கான் சீனாவில் ஒடுக்கப்படும் ‘உய்குர்’ முஸ்லிம்கள் பற்றி வாய் திறக்காதது ஏன்?? அமெரிக்க வெளியுறவு அதிகாரி சரமாரி கேள்வி!!

காஷ்மீர் பற்றி கவலைப்படும் இம்ரான்கான் சீனாவில் ஒடுக்கப்படும் ‘உய்குர்’ முஸ்லிம்கள் பற்றி வாய் திறக்காதது ஏன்?? அமெரிக்க வெளியுறவு அதிகாரி சரமாரி கேள்வி!!

Update: 2019-09-28 05:38 GMT


தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவு தற்காலிக செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் பேட்டி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் “காஷ்மீர் முஸ்லிம்கள் மீது பரிதாபப்படுவதாக கூறிக் கொண்டு பாசாங்குத்தனம் செய்யும் பாகிஸ்தான் தனது நெருங்கிய நட்பு நாடான சீனாவின் ஜியாங் மாகாண முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து மவுனம் சாதிப்பதேன்” என்று கேள்வியை எழுப்பியதாக டைம்ஸ் நவ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆலிஸ் வெல்ஸ், ஜம்மு-காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கவலைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, சீனாவின் மேற்கு மாகாணமான சின்ஜியாங் பிராந்தியத்தில் ‘உய்குர் இன முஸ்லிம்களை தனிமைப்படுத்தி அவர்கள் மீது இன ரீதியான பல தடைகள் விதித்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் ஏன் கண்டு கொள்ளவில்லை ... இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ஏன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் உள்ளது.


"... மேற்கு சீனாவில் மற்ற சீன மக்களைப்போல அல்லாமல் பல தடைகளுக்கு உள்ளாகி, பல நிபந்தனைகளுக்கு உள்ளாகி, உரிமைகள் பறிக்கப்பட்டு.. ‘மறு கல்வி’ முகாம்கள் என்ற பெயரில் வெகுஜன தடுப்புக்காவல் நிலையங்களுக்கு உய்குர் முஸ்லிம்கள் அனுப்பப்படுவதாகவும் பல சர்வதேச சிவில் சமூகங்கள் சீனா மீது குற்றம்சாட்டுவதாகவும் கூறிய அவர் ஐநா சபையின் பொது சபை கூட்டத்தின் போது இந்த பிரச்சினை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட முயன்றிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ” என்றார்.  


அவர் மேலும் கூறுகையில் “ மேற்கு ஜியாங்கில் மட்டுமல்ல, சீனா முழுவதுமே முஸ்லிம்கள் நிலைமை சரியில்லை. அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமைகள் தலை விரித்தாடுகின்றன. என்றார்.  


அண்டை நாடும் தனது நெருங்கிய நட்பு நாடுமான சீனாவில் உரிமைகள் பறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களைப் பற்றியும் பாகிஸ்தான் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது காஷ்மீர் முஸ்லிம்களின் மனித உரிமைகள் குறித்து காட்டும் அக்கறை மட்டும் போதாது.. காஷ்மீருக்கு அப்பாற்பட்டு அது மேலும் தனது பார்வையை பரந்த மனதுடன் திருப்ப வேண்டும் என்றார் அவர்.


This is a translated article from Swarajya Magazine


Similar News