வங்காளத்தில் கோவில் சிலைகள் உடைப்பு: தொடரும் அட்டூழியம்!
வங்காளத்தில் பிரசித்தி பெற்ற கோவில் சிலையான காளி மாதா சிலை உடைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய அண்டை நாடான வங்காளத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான கொண்ட நாடாக இருக்கின்றது. அங்கு இந்துக்கள் சிறுபான்மை மக்களாக பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வழிபடும் தளம் தளங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது வங்காளத்தின் தலைநகரான டாக்காவில் பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலை அங்குள்ள விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதால் தற்போது அங்கு பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கூட தசரா பண்டிகையின் போது சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியை நம்பி இந்து கோவில்கள் மீது ஒரு கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்டில் வங்காளத்தில் உள்ள டாக்காவில் இஸ்கான் கோவிலை ஒரு கும்பல் தாக்கி, அங்கிருந்த பக்தர்களும் தாக்கப்பட்ட சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்காளத்தில் ஜனதா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலை நேற்று இரவு ஒரு கும்பல் தாக்கி இருப்பதாக தெரிய வருகிறது.
சிலையை இரண்டாக உடைத்து அந்த கும்பல் அம்மன் சிலையின் தலைப்பகுதியை கோயிலுக்கு வெளியே விசி சென்றதாகவும் போலீசார் தரப்பில் தற்பொழுது தெரியவந்துள்ளது. இதை எடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகிறார்கள். அங்கு பதட்டமான சூழலை நிலவு வருகிறது இந்த ஒரு சம்பவம் அங்கு இருக்கும் இந்துக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News