கிறிஸ்துவ மதத்தை விட்டு மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பும் மக்கள்!
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்து மக்கள் தற்போது மீண்டும் இந்து மதத்தினை நோக்கி வருகிறார்கள்.
ஏராளமான மிஷனரிகளின் மூளைச்சலவை காரணமாக இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்து மக்கள், தற்போது மீண்டும் இந்து மதத்தை நோக்கி மாறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது, கர்நாடகாவில் உள்ள கர்வாப்சி ஜன்னாபூரில் உள்ள ராமபஜன் மந்திரில் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இந்து மதத்துக்குத் திரும்பியுள்ளனர். மீண்டும் மதம் மாறியவர்களில் ஜெயசீலன், அவரது மனைவி ஜெயம்மா, அவர்களது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரகாஷ், மற்றும் அவர்களது மருமகள்கள் லலிதா பிரபாகரன் மற்றும் ஸ்வேதா பிரகாஷ் ஆகியோர் அடங்குவர்.
ராம பஜன் மந்திரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், VHP மற்றும் பஜ்ரங்தள உறுப்பினர்கள் கர்வாப்சியின் ஒரு பகுதியாக அவர்களை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சி எடுத்தனர். மேலும் இதுபற்றி பஜ்ரங் தள் தலைவரும், அமைப்பாளர்களில் ஒருவருமான ராஜவன் வடிவேலு கூறுகையில், "பல குடும்பங்கள் இந்து மதத்திற்குத் திரும்ப விரும்புகின்றன. இந்தக் குடும்பங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களாக மாறி, மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்ப விரும்பினர். ஆனால் சமூகம் தங்களை ஏற்றுக்கொள்ளுமா? மற்றும் கிறிஸ்தவ சமூகம் தங்களைப் பற்றி என்ன நினைக்கும்? என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது" என்று அவர் கூறயுள்ளார்.
இதே மாதிரி இந்த ஆண்டு அக்டோபரில், கர்நாடகாவின் பா.ஜ.க MLA குலிஹட்டி T. சேகர் கூறுகையில், "கிறிஸ்தவர்களாக மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். மிஷனரிகளின் மூளை சலவை காரணமாக தன்னுடைய தாயும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதாக அவர் தெரிவித்துள்ளார். மூளைச்சலவை மற்றும் செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்றால், இப்போது இந்து கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகளைப் பார்க்கக்கூட அவரது அம்மா விரும்பவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Opindia