ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை! பாதிரிகளின் பித்தலாட்ட வீடியோ வைரல் ஆனது!!

ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை! பாதிரிகளின் பித்தலாட்ட வீடியோ வைரல் ஆனது!!

Update: 2019-09-21 10:59 GMT


தமிழகத்தில் டிஜிஎஸ் தினகரன், “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள்” என்று அறிவித்து இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனார். அவருக்கு வெளிநாடுகளிலிருந்தும் கோடிகோடியாக வந்து கொட்டியது. முடிவில் அவரது சிறுநீரக நோய்க்கு ஜெபம் செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளித்தார். அதோடு  அவர் கர்தரால் கைவிடப்பட்டார்.


ஜெப கூட்டங்களின் போது, அதற்காக ஏற்கெனவே ஒத்திகை நடத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நபர்களை, திடீரென மேடையில் ஏற்றி, ஊமை பேசி விட்டதாகவும், முடவன் நடந்து விட்டதாகவும், செவிடருக்கு கேட்கும் திறன் வந்துவிட்டதாகவும்  பித்தலாட்டம் செய்து வந்தார்.


அவரைப் பின்பற்றி புற்றீசல்கள் போல மோகன் சி லாசரஸ் உள்பட ஏராளமானோர் புறப்பட்டனர். அவர்களில் பலரும் முறைகேடாக வெளிநாடுகளிலிருந்து நிதிகளை பெற்று, சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். அன்று டிஜிஎஸ் தினகரன் செய்த அதே வேலையை இப்போது இவர்கள் செய்து வருகின்றனர்.


ஜெப கூட்டத்திற்கான ஒத்திகைகளை, மூடப்பட்ட அரங்கத்தினுள் நடத்துகின்றனர். பிறகு ஜெபக் கூட்டத்தின்போது, “நோயாளி குணம் அடைந்து விட்டார்! பேய் பிடித்தவருக்கு, பிசாசு நீங்கிவிட்டது! வேலை இல்லாமல் இருந்தவருக்கு ஜெபத்தின் வலிமையால் வேலை கிடைத்து விட்டது! திருமணம் ஆகாதவருக்கு திருமணம் நடந்துவிட்டது! குழந்தை இல்லாதவருக்கு குழந்தை பிறந்துவிட்டது” போன்ற பித்தலாட்டமான சாட்சியங்களை மேடையில் அரங்கேற்றி, அப்பாவி இந்துக்களை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றும் மோசடி வித்தைகள் தொடர்ந்து நடக்கின்றன.





ஆனால், மற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக ஜெபம் செய்யும் மோகன் சி லாசரசுக்கு ஏன் குழந்தை இல்லை என்று பலர் கேள்வி கேட்கின்றனர். ஆனால் அதற்கான பதிலை சொல்லும் துணிச்சலை அவருக்கு இன்னும் கர்த்தர் வழங்கவில்லை போலும்.


ஜெப கூட்டத்திற்கான ஒத்திகைகளில் இடம்பெறுகின்ற இளம் பெண்கள் மற்றும் ஆண்கள், ஜெப கூட்டத்தின்போது எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சியளிக்கப்படுகிறது. இதெற்கென்று நடிகர் - நடிகைகளும் உள்ளனர்.


பாதிரியார்களும், சில அனுபவம் வாய்ந்த பெண்களும் இந்த பித்தலாட்ட ஒத்திகையை கற்றுக் கொடுக்கின்றனர்.


இந்த பித்தலாட்ட ஒத்திகை வீடியோ காட்சி ஒன்று, கடந்த சில நாட்களாக ரெக்கை கட்டி பறக்கிறது சமூகவலைதளங்களில்...


அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள். இதுபோன்ற பித்தலாட்ட கும்பல்களை அடையாளம் கண்டு துரத்தியடியுங்கள்.




https://www.facebook.com/chinnappaganesan/videos/10214942686382548/

Similar News