முப்படைகளுக்கும் ஒரே தளபதி - அவசரகால உத்தரவுகள் நொடிப்பொழுதில் சாத்தியம் : பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
முப்படைகளுக்கும் ஒரே தளபதி - அவசரகால உத்தரவுகள் நொடிப்பொழுதில் சாத்தியம் : பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
விரைவில் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு.
நமது நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற பிறகு நமது நாட்டின் பாதுகாப்பு நிலை பற்றி ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. அதில் ராணுவ அமைச்சருக்கு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்குவதற்கு தலைமை தளபதி பதவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் குழுவும் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. அப்போது தேசிய பாதுகாப்பு நடைமுறைக்கு தலைமை தளபதி பதவி அவசியம் என்பது உணரப்பட்டது. அமைச்சர்கள் குழுவும் ஒரே தளபதி முறையை கொண்டு வர பரிந்துரைத்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு நரேஷ் சந்திரா குழுவும் தலைமை தளபதி பதவியை பரிந்துரைத்து இருந்தது. எனவே விரைவில் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.