'விக்ரம் 58' படத்தின் அப்டேட்டை அளித்த இந்தியா கிரிக்கெட் வீரர்.!
'விக்ரம் 58' படத்தின் அப்டேட்டை அளித்த இந்தியா கிரிக்கெட் வீரர்.!
விக்ரம் நடிப்பில் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதுஅனைவருக்கும் தெரியும். மேலும் இந்த படத்தில் பிரபல இந்தியா கிரிக்கெட் வீரர் மற்றும் வேக பந்து விசாளருமான இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது நமக்கு எற்கனவே தெரியும் .
இந்த நிலையில் இர்பான் பதான் அவருடைய சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் பற்றிய குறித்த புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், நடிப்பின் முதல் படி எடுத்து வைக்கும் தனக்கு உதவியாக தமிழ் மக்கள் இருந்ததாகவும், அதனால் தமிழ் மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மீண்டும் அவர் அனைவரையும் சந்திக்க ’ஐ அம் வெயிட்டிங்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் டுவீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார்.