நாடு பாதுகாப்பாக உள்ளது காரணம் எங்கள் ஆட்சி -மோடி

நாடு பாதுகாப்பாக உள்ளது காரணம் எங்கள் ஆட்சி -மோடி

Update: 2019-10-20 06:43 GMT

பிரதமர் அரியானாவின் ரிவாரி பகுதியில் நடந்த பிரசாத்தில்  நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.



கடந்த ஆட்சியை விட தற்போது இந்திய பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு தற்போது வலுப் பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இப்போது கடற்படையில் இது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதனால் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் அவர்களது வீட்டுக்குள் புகுந்து கொன்று வருகிறோம்



கடலோர பாதுகாப்பு இப்போது வலுவாக உள்ளது. ரபேல் போன்ற சிறப்பான ஆயுதங்கள் வாங்கி உள்ளோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் சிலர் தற்போது உலக நாடுகளின் உதவியை நாடி நிற்கின்றனர்.


காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கடும் நடவடிக்கையால் முன்னேற்றம் ஏற்படுகிறது. 370 என்ற போர்வையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தற்போது அடக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.


Similar News