இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை” - இஸ்ரோ தலைவர் சிவன் அதிரடி!
இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை” - இஸ்ரோ தலைவர் சிவன் அதிரடி!
பெங்களூரில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வெளிநாடுகளை சேர்ந்த சிலர் இந்தியா ஒரு ஏழை நாடு என கூறுகிறார்கள். மேலும், ஏழை நாட்டிற்கு எதற்கு விண்வெளி தொழில்நுட்பம் என கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறுவதாவது, இந்தியா ஒரு ஏழை நாடு என நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை.
பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. வாங்கும் திறனில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் வியக்கத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
விண்வெளித்துறை இன்றைய வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இந்தியா தனது வளங்களை அதன் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்துகிறது. உலக அளவில் இத்தகைய நிலையில் உள்ள இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை.
இவ்வாறு சிவன் குறிப்பிட்டார்.