ஈரான் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சியில் இந்தியாவும் இணைந்தது.!
ஈரான் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சியில் இந்தியாவும் இணைந்தது.!
இந்திய பெருங்கடல் பகுதியான வடபகுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இரண்டு நாட்கள் பயிற்சியாக நேற்று தொடங்கியது. இதில் ஈரான் கப்பல்கள் பங்கேற்றன. அவர்களுடன் ரஷ்ய நாட்டு கப்பல்களும் பயிற்சியில் கலந்து கொண்டது.
இந்நிலையில், இந்த பயிற்சியில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளதாக அட்மிரல் கோலம்ரிஜா தஹானி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் விருப்பம் இருந்தால் வேறு சில நாடுகளும் கலந்து கொள்ளலாம் என அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் துப்பாக்கி சுடுதல், வான் பரப்பில் இருந்து இலக்குகளை நோக்கி சுடுதல், தீவிரவாதிகள் பிடித்து செல்லும் கப்பல்களை விடுவித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என கூறினார்.