தொழில் துவங்க உகந்த நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா - பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால் சாத்தியம்.!

தொழில் துவங்க உகந்த நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா - பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால் சாத்தியம்.!

Update: 2019-10-24 14:31 GMT

உலக வங்கி தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டு 77 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 14 இடங்கள் முன்னேறி 63 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒரே ஆண்டியில் அதிவேக வளர்ச்சி கண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.


இதற்கு இந்திய பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டமே காரணம். இதன் மூலமாக வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்றும், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் காரணமாக தனியார் துறைகள் உத்வேகம் அடைந்தன என்றும், இதனால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Similar News