ஆங்கிலத்தைப் போல இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும்!! அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவு!!

ஆங்கிலத்தைப் போல இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும்!! அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவு!!

Update: 2019-09-18 07:02 GMT

இந்தி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.


மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ''பிரதமர் மோடி தமிழ் மொழி குறித்தும் திருக்குறளின் பெருமைகள் பற்றியும் பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் திருக்குறளையும் புறநானூறையும் மேற்கோள் காட்டிப் பேசியதுண்டா?


ஜப்பானில் ஜப்பானிய மொழி தெரிந்தவர்களுக்குத்தான் மதிப்பு. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ஜப்பான் மூலமாகவே எதையும் அறிந்துகொள்ள முடியும். ரஷ்யாவிலும் இதேப் போக்குதான் நிலவுகிறது. அமெரிக்காவில் லத்தீன் மொழி தெரிய வேண்டும்.


ஆனால் நமது நாட்டில் இந்தி மொழிக்கு இந்த நிலை இல்லை. மாநில மொழிகளுக்கு அந்தஸ்து இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தவரும் ஆங்கிலத்தைக் கற்பதோடு இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அமித் ஷா. நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதிலென்ன தவறு?'' என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் செல்லூர் ராஜு.


அமைச்சர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தினாலும் பொதுவாக நிலவும் உண்மை நிலவரத்தையே அவர் கூறியுள்ளதாக பலரும் கருதுகின்றனர்.


https://www.hindutamil.in/news/tamilnadu/515990-sellur-raju-about-amit-shah-speech.html


Similar News