பொருளாதார மந்தம் என்பது மாயத்தோற்றம், நுகர்வு அதிகரிப்பால் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அது மறையும் - நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
பொருளாதார மந்தம் என்பது மாயத்தோற்றம், நுகர்வு அதிகரிப்பால் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அது மறையும் - நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக் காலத்தில் அதாவது வரும் அக்டோபர் மாதத்திலிருந்து பொது மக்கள் நுகர்வு மீண்டும் அதிகரித்து பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்து விலகி மேம்படும் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். வங்கிகள் தங்களது கடன் வழங்கும் நடவடிக்கைகளை அதிகரித்து வருவதால் பொருளாதாரம் மேம்படும் என்றும் சமீபத்தில் பொதுத்துறை வங்கி மூத்த நிர்வாகிகளைச் சந்தித்ததாகவும், அதன்பிறகு தற்போது கடன் வழங்கும் தனியார் துறையினர் மற்றும் நிதி நிறுவனங்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியபோது அதற்கான நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
வங்கிகள் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. கடன் வழங்க போதிய தேவை உள்ளதாகவே அவர்கள் கூறுகின்றனர். . அவர்களுடனான இந்த சந்திப்பு ஒரு சத்தான விஷயமாக இருந்ததாகவும், இந்த சந்திப்பில் நிறைய நல்ல விவரங்களையும், நேர்மறையான விஷயங்களுக்கான பதிலையும் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன் .. எனக்கு கிடைத்த தகவல்படி இந்தியாவில் நுகர்வு நன்றாக நடைபெறுகிறது. மாநில அளவிலான வங்கிகள் 400 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை தடை இல்லாமல் அளித்து வருகின்றன. போதுமான அளவில் நிதி சுழற்சி உள்ளது.
பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டதாகவே தெரிந்தாலும் இது வரவிருக்கும் பண்டிகை காலங்கள், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாறும் என்றார்.
மோட்டார் வாகன விற்பனையின் சரிவு, சில நேரங்களில் இயல்பாக நடைபெறுவதுதான் என்றும் அடுத்த 3 முதல் 6 மாதங்களில் இது முன்னேற்றம் அடையும் என்றும் வங்கி நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறினார். பயணிகள் வாகன விற்பனையில் நிலவும் மந்தநிலை என்பது ஒரு மனப் பிராந்தி என்றும் இது ஒரு கானல் நீரைப் போன்ற மாயத்தோற்றம் என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் இது மேம்படும் என்று வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.