அணுஆயுத கொள்கை மாறலாம்: ஹார்ன் அடித்த இந்தியா !அலறித் துடிக்கும் இம்ரான்கான்!!

அணுஆயுத கொள்கை மாறலாம்: ஹார்ன் அடித்த இந்தியா !அலறித் துடிக்கும் இம்ரான்கான்!!

Update: 2019-08-19 08:08 GMT

இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் பாக்.,பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.


இந்தியா அணுகுண்டை முதலில் பயன்படுத்தாது என்பதே நமது கொள்கையாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு திட்டவட்டமாக கூறியதில்லை. பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதே சர்வதேச நாடுகளின் கருத்து. ஏனெனில் அந்த நாடு பயங்கரவாதிகள் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்துக்கு உட்பட்ட நாடு. எனவே இந்தியா பாகிஸ்தான் விஷயத்தில் சர்வ எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள முடிவு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு இராணுவத்தை கொதிப்புறச் செய்துள்ளது.


இந்த நிலையில் சமீபத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம். என்றாலும் வரும் கால சூழலுக்கு ஏற்ப அணுஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்.


இவரது பேச்சை கண்டு நடுங்கிப்போன பாக்., பிரதமர் இம்ரான்கான்; அவரது டுவிட்டரில்;” பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் கொள்ளவேண்டும் இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல. உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும்.


ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அங்குள்ள இந்து  அமைப்புகளின் போக்கு மோசமாக உள்ளது. சர்வதேச நாடுகள் இப்போதே தலையிட வேண்டும். இது மேலும் பரவக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News