3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி !

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி !

Update: 2019-11-11 05:06 GMT


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.


இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில்  நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா 6 பந்துகளை சந்தித்த நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஷைஃபுல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.


பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் அதிரடி காட்ட இந்தியாவின் ஸ்கோர் சற்று ஏறியது. 19 ரன்களை எடுத்த ஷிகர் தவான் ஷைஃபுல் பந்தில் மஹமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட, மறுமுனையில் லோகேஷும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்களை எட்டிய நிலையில் அல் அமின் பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் லோகேஷ் ராகுல். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது இந்திய அணி.


175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது தோல்வியை தழுவியது வங்கதேச அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி. சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் 3.2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெறுமையையும் பெற்றார்.


Similar News