ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனை இந்திய சினிமா நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர்!!

ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனை இந்திய சினிமா நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர்!!

Update: 2019-08-20 10:32 GMT

உலக திரைப்பட சாதனை முயற்சியாக R.பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் பாராட்டு குவிந்து வருகிறது.


ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால்
மற்றும் யாஷ் ஆகியோர் இப்படத்தை பாராட்டு தெரிவித்துள்ளனர்.


பார்த்திபன் தயாரித்து,இயக்கியதுடன், தனியொரு மனிதனாக படத்தை தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனை மனசார வாழ்த்திப் புகழ்கின்றனர்.


மற்றும் ஆஸ்கர் விருதுக்கு முழு தகுதியுள்ள இந்தப் படத்திற்கு ஏற்கெனவே ஆஸ்கர் விருதை வென்ற புரொடக்ஷன் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.


ராம்ஜி ஒளி்ப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.சத்யா பின்னணி இசைக் கோர்பு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்துக்கு அகடமி விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பொறுப்பற்றிருக்கின்றனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார்.


Similar News