142 ஆவது இடத்திலிருந்து 77 ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா - இந்திய பொருளாதாரத்தை மாற்றி அமைத்த பா.ஜ.க அரசு!

142 ஆவது இடத்திலிருந்து 77 ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா - இந்திய பொருளாதாரத்தை மாற்றி அமைத்த பா.ஜ.க அரசு!

Update: 2019-09-16 08:59 GMT
2014 ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்கு எளிதான நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 142 ஆவது இடத்திலிருந்த இந்தியா 2018-ல் 77 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எல்லைக்கப்பாலான வணிகத்தில் 122-லிருந்து 80-க்கு முன்னேறியிருக்கிறது. ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜவுளித்துறையும், மற்றபிற துறைகளும் தற்போது 2 சதவீதம் வரை அனுபவித்து வரும், ஏற்றுமதி பொருளுக்கான தீர்வைகள் அல்லது வரிகள் குறைப்பு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கும் 01.01.2020-லிருந்து மாற்றப்படும்.
ஏற்றுமதி கடனுக்கான முன்னுரிமை விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் உள்ளன. இது அமலுக்கு வரும்போது, முன்னுரிமை துறைகளுக்கான நிதி விடுவிப்பு ரூ.36,000 கோடியிலிருந்து, ரூ.68,000 ஆக அதிகரிக்கும்.
வருடாந்தர மெகா ஷாப்பிங் விழாக்கள், 2020 மார்ச் மாதத்தில் 4 இடங்களில் நடத்தப்படும். கைவினைப்பொருட்கள் / யோகா / சுற்றுலா / ஜவுளி / தோல் பொருட்கள் போன்றைவை இவற்றில் இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவுக்குள் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் சான்றிதழ்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து குறைந்த செலவில் சோதனை செய்து சான்றிதழ் வழங்குவதற்குப் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News