தாக்குதலுக்கு தயாரான இந்தியா - உஷார் நிலையில் கடற்படை : பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட தயார்.!

தாக்குதலுக்கு தயாரான இந்தியா - உஷார் நிலையில் கடற்படை : பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட தயார்.!

Update: 2019-08-09 11:33 GMT

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்திய கடற்படை தனது போர் கப்பல்களுடன் உஷார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொண்டது.


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.


இந்நிலையில், தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக, இந்திய கடற்படை உஷார் நிலையில் இருப்பதாகவும், கடற்பகுதிகளில் போர்க் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Similar News