சீனாவுக்கே சப்ளை செய்யும் இந்தியா - 9 மாதங்களில் மும்மடங்காக உயர்ந்த கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி : 1 பில்லியன் டாலர் சந்தையை கைப்பற்றி அபாரம்!
சீனாவுக்கே சப்ளை செய்யும் இந்தியா - 9 மாதங்களில் மும்மடங்காக உயர்ந்த கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி : 1 பில்லியன் டாலர் சந்தையை கைப்பற்றி அபாரம்!
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 800 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல் சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மும்மடங்கு அதிகரிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சீன சுங்கத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த அளவானது இந்த வருட இறுதிக்குள் 1 பில்லியன் டாலர் அளவாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல் சார் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலக அளவில் 4 ஆம் இடம் வகிக்கிறது. அக்குவா கல்ச்சர் தயாரிப்பில் உலக அளவில் இரண்டாம் இடமும், மீன் உற்பத்தியில் மூன்றாம் இடமும் வகிக்கிறது. இதன் மூலம் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை கையில் வைத்துள்ளது. இதில் சீனா 11 பில்லியன் டாலர் மதிப்பிலான கடல் சார் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு வணிகத்தை கொண்டுள்ளது.
இந்தியாவின் இந்த ஏற்றுமதி சாதனை அளவானது சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியினால் சாத்தியமாகியுள்ளது.