2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்!

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்!

Update: 2019-10-16 15:02 GMT

நாட்டின் சில்லரைப் பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நாட்டின் பணவீக்க புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சில்லரை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிதமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


நாட்டின் பணவீக்க விகிதத் தைத் தீர்மானிக்கும் பிரிவுகளில், உணவுப் பொருட்கள் பணவீக்கமே முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில், காய்கறிகளின் விலையில் பணவீக்கம் 15.4 சதவிகிதமாகவும், இறைச்சி மற்றும் மீன் விலையில் பணவீக்கம் 10.29 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.


இதனிடையே, செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 0.33 சதவிகிதமாக குறைந்துள்ளது. உற்பத்திப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை குறைந்தது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.


2019-20 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4 சதவிகிதத்தை தாண்டிவிடக் கூடாது என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.




Similar News