அப்பாவி மக்களை பிணை கைதிகளாக்கினர்! பயங்கரவாதிகளை தீர்த்துகட்டி மக்களை மீட்ட பாதுகாப்பு படையினர்!!
அப்பாவி மக்களை பிணை கைதிகளாக்கினர்! பயங்கரவாதிகளை தீர்த்துகட்டி மக்களை மீட்ட பாதுகாப்பு படையினர்!!
காஷ்மீர் மாநிலம், ஜம்மு பகுதியிலுள்ள ரம்பன் மாவட்டம் படோடே என்ற இடத்தில் இன்று அதிகாலை பயணிகளுடன் சென்ற பஸ்சை வழிமறித்தனர் பயங்கரவாதிகள்.
ராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அவர்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று தெரிந்துகொண்ட அரசு பஸ் டிரைவர், பஸ்சை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக ஓட்டி சென்றார். அதன்பிறகு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காஷ்மீர் போலீசும், எல்லை பாதுகாப்பு படையும், ராணுவத்தினரும் ஒருங்கிணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன.
அவர்களைப் பார்த்ததும் அந்த 5 பயங்கரவாதிகளும் அருகில் இருந்த ஒரு வீட்டினுள் புகுந்து அங்கு இருந்த அப்பாவி மக்களை பிணைக்கைதிகளாக சிறை பிடித்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர், அந்த வீட்டை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடத்தினர். நீண்ட நேரம் தொடர்ந்த இந்த சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களை பாதுகாப்போடு மீட்ட ராணுவத்தினரும், போலீசாரும் உற்சாகமாக கொண்டாடினர்.