எக்காரணத்தை கொண்டும் சேலம் உருக்காலை தனியாருக்கு போகாது - தமிழக பா.ஜ.க பொது செயலாளர் வானதி சீனிவாசன் மேற்கொண்ட துரித நடவடிக்கை.!

எக்காரணத்தை கொண்டும் சேலம் உருக்காலை தனியாருக்கு போகாது - தமிழக பா.ஜ.க பொது செயலாளர் வானதி சீனிவாசன் மேற்கொண்ட துரித நடவடிக்கை.!

Update: 2019-09-10 06:33 GMT

சேலம் உருக்காலை தனியார் மயமாக கூடாது என்று கதொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உருக்காலையை டெண்டர் எடுப்பதற்காக ஆலையை பார்வையிட வரும் தனியார் நிறுவனங்களை தடுக்க அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் 35-வது நாளில் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உருக்காலை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, உருக்காலையை லாபத்தில் இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் உருக்காலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களில் ஒருவர் கூட வேலை இழக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்கு விற்பனை செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள டெண்டரை திரும்ப பெற பா.ஜ.க சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உருக்காலை நிர்வாகத்தில் ரூ.2,300 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளதே தவிர, அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.


தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம், சேலம் உருக்காலை பங்குகளை பெற்று கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறோம். அவர், பங்குகளை வாங்கும் அளவுக்கு தமிழக அரசிடம்  நிதி அரசிடம் உள்ளதா? என முதல்வரிடம் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்க வலியுறுத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து மூலப்பொருட்களின் விலையை குறைத்தது, விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


நாடு முழுவதும் நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சேலம் உருக்காலையை நஷ்டத்தில் இருந்து மாற்றி லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது என சொல்லி வந்த நிலையில், தற்போது யார் அடுத்த யார் பா.ஜ.க. தலைவர்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவே பா.ஜ.க. வளர்ந்துள்ளதை காட்டுகிறது' என்று கூறியுள்ளார்.


Similar News